மழைத்துளியை போன்றே
மணித்துளியும்..
உன் நினைவுகள் என் மனதில்
பசுமரத்தின் அணியே !!
மரணத்தில் நினைவுகள்...
அழ்மனதின் அச்சுகள்..
Monday, October 5, 2009
மரணத்தில் நினைவுகள்...
Thursday, October 1, 2009
மலரின் ஓலம்...
மலரின் ஓலம்...
முக வரிகளின் கண்காட்சி...
தோழன் அருகில் இல்லை...
வேலை நிமித்தம்...
நினைத்தவள் தூரத்தில்..
வேதியல் நிமித்தம்...
நண்பர்களின் துணையுடன்...
வரிகளின் கண்கவர் காட்சி..
Thursday, September 24, 2009
நான் ஏன்...
காலம் காலமாய்..
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...
இந்த பூவைப் போல்...
பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...
Tuesday, August 18, 2009
சுதந்திரம்
இது தான் சுதந்திரம்..
அறுபத்திரண்டு ஆண்டு சுதந்திரத்தின்
எச்ச மிச்சங்களாய் என் சொந்தங்கள்
நடுவீதியில்..
மனிதர்களிடம் மனிதம் கேட்க
பச்சிளம் குழந்தை
நடுவீதியில்...
கேட்பாரற்று கிடக்குது என் நாட்டின் சுதந்திரம்
நடுவீதியில்..
Friday, July 24, 2009
காலியாய்...
கானல் நீராகி போன நகர வாழ்க்கை...
தண்ணீர்க்கு மட்டுமல்ல.. அன்புக்கும் தான்...
காலி குடங்களைப் போல்.. காலியாய் இதயங்கள்..
வண்ண வண்ண குடங்களை போல்... வண்ணக் கனவுகளுடன்..
Tuesday, July 21, 2009
மழலை..
அம்மா.. ஒரே மந்திர சொல்..
அனைத்தும் என் சொல் கேட்கும்...
என் வீரிடும் அழுகைக்கு வீடே கலவரம் ஆகும்..
என் அம்மாவின் மடியும் தோளும்
என்னை அமைதி படுத்தும் போதி ஆகும்..
என் சாந்த பார்வைக்கும்..
என் பொக்கை வாய் சிரிப்புக்கும்...
என் வீடே அடிமை ஆகும்..
Monday, July 20, 2009
உடைத்து எரி....
உன் முன்னே ஆயிரம் தடைகள்..
பூவாய் பிறந்ததால்..
உனக்கு இன்னும் இன்னல்கள்..
சிறுமியாய் போனாய்..
தடைகள் சொல்லிமாலாது..
தடைகளை உடைத்து எரி..
பூலோகத்தை உன்னை திரும்பி பார்க்க செய்..
Tuesday, July 7, 2009
எப்பப்பா....
அயல் நாட்டிலே அப்பா வேலை....
அப்பத்தா, அம்மத்தா, தாத்தா
எல்லாம் எங்க ஊருல...
சித்தி, சித்தாப்பா, தம்பி எல்லாம்
போன்ல பேசுறாங்க, போட்டா அனுப்புறாங்க...
நானும் தான்..
நானும் தாத்தாவ பார்க்கும் போது பூ கொடுக்கனும்னு ரோசா பூ செடி வளர்க்குறேன்...
பாருங்க.. பூத்து வாடிருச்சு...
அப்பா..
எப்பப்பா தாத்தாவ தம்பிய பார்க்க கூட்டிட்டு போவ...
Monday, June 22, 2009
நீலவேணி...
கார்வண்ண நிறம்...
வண்ணத்தின் ஒரு அச்சு...
தனியே ஒரு விருச்சம்..
ஊருக்கு ஒதுக்கு புறமாய்..
மற்ற மரத்தின் தீண்டுதல் இல்லாமல்..
தன்னை தனித்து
ஒருமைபடுத்தி
தன்னிலைபடுத்தி..
தனித்துவுமாய்...
Friday, June 12, 2009
மறைத்தாலும்...
வெட்கம்...
அச்சம்..
நாணம்..
பெண்மை...
நட்பு...
காதல்...
பல வண்ண ஆடைகளினால் இவை உன்னால் மறைக்கப்பட்டாலும் உன் கண்கள், உதடுகள் அதை காட்டிக்கொடுக்கின்றன...
Wednesday, June 10, 2009
ஏக்கம்..
எனக்கும் உண்டு..
எங்களுக்கும் உண்டு...
அன்பிற்காய் முதலில்...
அரவணைப்பிற்காய் பிறகு...
என் மீது கவனத்திற்காய்..
தாய்மை..
பெண்ணுக்கே உரித்ததல்ல தாய்மை...
ஆணுக்கும் உண்டு தாய்மை...
பெண்களுக்கே உரித்தான ஆணின் மீது உள்ள ஈர்ப்பு அன்பே... தாய்மையின் வெளிப்பாடு...
காதலில்....
அனைத்தும் புதிதாய் தோன்றும்..
புத்தம் புதிதாய்...
காலை பனி போன்று...
தாயின் அன்பை போன்றே...
புதிதாய் பூத்த மலரை போன்று...
காதலினால் மட்டுமே...
Thursday, June 4, 2009
Moon Girl
பெண்ணே நிலவொளியில்
என்ன தேடி செல்கிறாய் ,
உன் நிழலில் மறைந்த என் நிஜங்களையா...
இரவில் தேடி என்ன பயன் ...?
பகல் ஒளியில் தேடு..உன் நிழலில் நான் இருப்பேன் .
அது வரை எனக்கு நிழல்
தரும் நிலவை விட்டு விடு...
-Bhagath makka
Saturday, May 30, 2009
Friday, May 29, 2009
Monday, May 11, 2009
சாலை ஓரம்..

சாலை ஓரம் ஒரு பழுத்த பழம்...
ஆலமரம் சந்ததி இல்லாமல்..
தேடி பிடித்து விழுது வாங்கி..
உயிர் கொடுத்து வளர்த்து..
வந்து சேர்ந்த மரம்..
பழத்தை சாலையில் வீசி எரிந்தது..
துணையும் துணையில்லாமல்..
தனியே சாலையே துணையென்று உழழுது..
தன்னை மாய்க்க முயற்சி செய்து தோற்று..
மறு முயற்சிக்கு கயிறுடன்..
(கடந்த மாதம் புகைப்படம் எடுத்த என் மனிதரிடம், இன்று உணவு உண்டாச்சா என்ற கேள்விக்கு, தன் மனக்குமறலை மட்டுபடுத்த முடியாமல் கண்ணீருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.. இடம்: டெய்லர் சாலை, கீழ்ப்பாக்கம்)
Thursday, April 2, 2009
Wednesday, April 1, 2009
Thursday, March 26, 2009
Tuesday, March 24, 2009
அழகி...
அழகனின் வண்ணம்...
குவியலாய் புன்னகை..
கண்ணில் ஒரு வசிகரம்..
ஏதோ சொல்ல வந்து ஏதேதோ பிதற்றிக்கொண்டு இருக்கின்றேன்...
Wednesday, March 18, 2009
Tuesday, March 17, 2009
Sunday, March 15, 2009
அறியாமை
மகரந்ததிற்கு துணை புரிகின்றேம் என்று...
நன்றியாய் தன் உயிரைத் தேனாய் செடிகள்..
(தாராசுரம் கோவிலில், செடிகளின் அபிவிருத்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிறு வண்ணத்துப்பூச்சி...)
Thursday, March 12, 2009
Friday, February 6, 2009
Monday, February 2, 2009
Sunday, February 1, 2009
Wednesday, January 28, 2009
சந்திப்பு....
மறுத்தது உண்மை தான்..
பின் உன்னையே பார்க்க
வைத்து விட்டாயே, பிறர் பார்த்த பொழுதும்...