Friday, July 24, 2009

காலியாய்...

கானல் நீராகி போன நகர வாழ்க்கை...
தண்ணீர்க்கு மட்டுமல்ல.. அன்புக்கும் தான்...
காலி குடங்களைப் போல்.. காலியாய் இதயங்கள்..
வண்ண வண்ண குடங்களை போல்... வண்ணக் கனவுகளுடன்..

Tuesday, July 21, 2009

மழலை..


mommy and i, originally uploaded by Archana Ramaswamy.

அம்மா.. ஒரே மந்திர சொல்..
அனைத்தும் என் சொல் கேட்கும்...
என் வீரிடும் அழுகைக்கு வீடே கலவரம் ஆகும்..

என் அம்மாவின் மடியும் தோளும்
என்னை அமைதி படுத்தும் போதி ஆகும்..

என் சாந்த பார்வைக்கும்..
என் பொக்கை வாய் சிரிப்புக்கும்...
என் வீடே அடிமை ஆகும்..

Monday, July 20, 2009

உடைத்து எரி....


Charm, originally uploaded by bhagath makka.

உன் முன்னே ஆயிரம் தடைகள்..
பூவாய் பிறந்ததால்..
உனக்கு இன்னும் இன்னல்கள்..
சிறுமியாய் போனாய்..
தடைகள் சொல்லிமாலாது..

தடைகளை உடைத்து எரி..
பூலோகத்தை உன்னை திரும்பி பார்க்க செய்..

Tuesday, July 7, 2009

எப்பப்பா....


Advaitha, originally uploaded by bhagath makka.

அயல் நாட்டிலே அப்பா வேலை....
அப்பத்தா, அம்மத்தா, தாத்தா
எல்லாம் எங்க ஊருல...
சித்தி, சித்தாப்பா, தம்பி எல்லாம்
போன்ல பேசுறாங்க, போட்டா அனுப்புறாங்க...
நானும் தான்..

நானும் தாத்தாவ பார்க்கும் போது பூ கொடுக்கனும்னு ரோசா பூ செடி வளர்க்குறேன்...
பாருங்க.. பூத்து வாடிருச்சு...
அப்பா..
எப்பப்பா தாத்தாவ தம்பிய பார்க்க கூட்டிட்டு போவ...

விளையாட்டு...


Advaitha, originally uploaded by bhagath makka.

பூவை காம்பு தாங்கும்..
ஆனால் இங்கோ...
பூ காம்பை தாங்கி விளையாடுது...

கனவுகளுடன்..


Traditional, originally uploaded by bhagath makka.

காத்திருப்பேன் கண்ணே...
கனவுகளுடன்..