Thursday, September 30, 2010

நாளை...


கலை..., originally uploaded by Karthick Makka.

நாளை முடிவு!
எந்த மதத்தவராக இருந்தாலும்,
கலகத்தில் மரணிப்பது மனிதமே…

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நாங்கள் அண்ணன் தம்பியாகத்தானே இருக்கின்றோம்..
யாரோ தீயை மூட்டினார்கள்..
கடைக்கோடி வரை..
காவலர்களின் பாதுகாப்பு..

Sunday, May 30, 2010

பிரிவு..


பிரிவு.., originally uploaded by Karthick Makka.

நிலையம் செல்லும் வரை உற்சாகமும் குதுகலிப்புமே..
நேரம் செல்ல செல்ல..

ஒன்றும் புரியவில்லை...
தலையை பிய்த்துக் கொண்டு நான்..
கண்கள் சிவந்த நீ...

குறும்பயணம்.. வார இறுதிக்காய்..
காத்திருந்து..
ஓடி சந்தித்துக் கொள்வோம்..

நெடும் பயணம் சந்திக்க வழியில்லை..
காத்திருக்க தான் வேண்டும்..

எத்துனை முறை தான் பிரித்து பார்ப்பார்கள்..

பிரிவு புதிதில்லை.. சற்று காலம் தேவை தான்.. புரிந்து கொள்ள..

திரும்பி வா.. காத்திருக்கிறேன்.. இல்லை நான் வருகிறேன்.. காத்திரு...

ஒவியம்: அண்ணன் புகழேந்தி (Art : Pugazendhi)

Monday, October 5, 2009

மரணத்தில் நினைவுகள்...


Memories !!!, originally uploaded by harikbalasundaram.

மழைத்துளியை போன்றே
மணித்துளியும்..

உன் நினைவுகள் என் மனதில்
பசுமரத்தின் அணியே !!

மரணத்தில் நினைவுகள்...
அழ்மனதின் அச்சுகள்..

Thursday, October 1, 2009

மலரின் ஓலம்...


Away, originally uploaded by Karthick Makka.

மலரின் ஓலம்...

முக வரிகளின் கண்காட்சி...
தோழன் அருகில் இல்லை...
வேலை நிமித்தம்...

நினைத்தவள் தூரத்தில்..
வேதியல் நிமித்தம்...

நண்பர்களின் துணையுடன்...
வரிகளின் கண்கவர் காட்சி..

Thursday, September 24, 2009

நான் ஏன்...


For My LOVE, originally uploaded by Karthick Makka.

காலம் காலமாய்..
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...


இந்த பூவைப் போல்...

பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...

Tuesday, August 18, 2009

சுதந்திரம்

இது தான் சுதந்திரம்..

அறுபத்திரண்டு ஆண்டு சுதந்திரத்தின்
எச்ச மிச்சங்களாய் என் சொந்தங்கள்
நடுவீதியில்..

மனிதர்களிடம் மனிதம் கேட்க
பச்சிளம் குழந்தை
நடுவீதியில்...

கேட்பாரற்று கிடக்குது என் நாட்டின் சுதந்திரம்
நடுவீதியில்..

முரண்பாடு


முரண்பாடு, originally uploaded by aiyorama.

வாழ்க்கை..

முரண்பட்டு போன வாழ்க்கை...
முட்களாய் தோன்றினாலும்..
சேதாரம் ஏற்படுத்தினாலும்..
அன்பால் அதனை
கடந்து தான் போக வேண்டும்....

முரண்பட்டு போன வாழ்க்கை...